Jailer 2: "அனிருத் திருமணம்; ரஜினி சாரின் தத்துவம்!" – பியார்ன் சுர்ராவோ ஷேரிங்ஸ்

Spread the love

‘ஜெயிலர் 2’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் அள்ளி வருகிறது. ரஜினிகாந்த் நடித்திருக்கும் இந்தப் படத்தை நெல்சன் இயக்கியிருக்கிறார்.

Jailer 2 - Rajinikanth
Jailer 2 – Rajinikanth

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் புட்டாபு கேங்கில் ஒருவராக வரும் பியார்ன் சுர்ராவோவை பேட்டி கண்டோம்.

நம்மிடையே பேசியவர், ”ரஜினி சார் ஜாலியான மனிதர். அப்படிப்பட்ட ஒரு லெஜண்டை நேரில் சந்தித்ததே என்னை மிகப்பெரிய ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர வைக்கிறது.

படப்பிடிப்பு இடைவேளையில் நிறைய தத்துவங்கள் சார்ந்து பேசுவார். நிறைய ஜோக்குகளும் சொல்வார். தத்துவங்கள், ஆன்மிகம் ஆகியவை நான் எப்போதும் எக்ஸ்ப்ளோர் பண்ண விரும்பிய விஷயங்கள்.

ரஜினி சார் மிகவும் அனுபவம் வாய்ந்த மனிதர்களில் ஒருவர். அவரே இந்த விஷயங்களைப் பற்றியெல்லாம் பகிர்ந்தார். அதெல்லாம் மிகவும் சிறப்பான உரையாடல்கள். ஷூட்டிங் ஸ்பாட் எப்போதும் கலகலப்பாக இருக்கும்.

Bjorn Surrao
Bjorn Surrao

எங்களுடைய புட்டாபு கேங்கும் எப்போதும் ஜாலியாக இருப்போம். அதேபோல யோகி பாபு சாருக்கென ஒரு கேங் இருக்கிறது. அவர்களும் செம ஃபன். மூர்த்தி அண்ணன் கேரக்டருக்கு மக்கள் கொண்டாடி வருகிறார்கள். மூர்த்தி அண்ணன் கதாபாத்திர வடிவமைப்பும் ரொம்பவே கச்சிதமாக அமைந்துவிட்டது.

தலைவர் ரஜினி சாரும் மூர்த்தி அண்ணனின் காமெடியை ரொம்பவே என்ஜாய் பண்ணி ரசித்தார்” என்றவர், அனிருத் திருமணம் குறித்து, “அவருக்காக நான் எப்போதுமே ரொம்ப சந்தோஷப்படுவேன்.

அவருக்கு கிடைத்திருக்கும் உயரத்திற்கு அவர் உரித்தானவர். அனிருத்தும் நானும் நீண்ட நாள்களாக ஒன்றாகப் பயணித்து வருகிறோம். கல்லூரி காலத்தில் நாங்கள் அனைவரும் ஒரே இசைக்குழுவில் இருந்தோம். அனிருத்தே ஒரு சின்ன தலைவர்தான்! இப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறார். அனிருத்தும் காவ்யாவும் என்னுடைய நண்பர்கள்தான்!” எனப் பகிர்ந்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *