
இந்த சோதனையின் போது உருளை கிழங்கு உள்ளிட்ட காய்கறி மூடைகளுக்கு இடையே சந்தேகப்படும் நிலையில் சில மூட்டைகள் இருந்துள்ளது. அவற்றை க்யூ பிரிவு போலீஸார் பிரித்த போது அதில் தலா 2 கிலோ எடையில் 146 பார்சல்களில் கஞ்சா இருந்துள்ளது. புதுமடம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக இவை கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து கடத்துவதற்காக கொண்டுவரப்பட்ட 192 கிலோ கஞ்சாவினை பறிமுதல் செய்த க்யூ பிரிவு போலீஸார், வேனை ஓட்டி வந்த விளாத்திகுளத்தை சேர்ந்த தங்கராஜ், சேகர் மற்றும் பெருங்குளத்தை சேர்ந்த செந்தில்வேலன் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.