நடிகை சமந்தாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. சமந்தாவுக்கும், இயக்குநர் ராஜ் நிடிமோருவுக்கும் கடந்த 2025-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்குப் பிறகு, இந்தாண்டு ஜூன் மாதம், தன்னுடைய “மா இன்டி பங்காரம்’ பட விழாவில், தான் கர்ப்பமாக இருப்பதைச் சமந்தா அறிவித்தார். தனது கர்ப்பகாலத்தின் ஒவ்வொரு தருணத்தையும் தொடர்ந்து மூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தார் சமந்தா.