குஷி
‘ மேகம் கருக்குது’
தேவாவின் வெஸ்டர்ன் மெலடி திறமைக்கு மகுடமாக அமைந்த இந்தப் பாடலை முழுக்க முழுக்க மேற்கத்திய கிளப் நடன பாணியில் அமைத்திருப்பார்.
பாடலின் தொடக்கத்தில் இருந்தே வரும் அந்த அதிவேக தாளக்கட்டு … வரிகளுக்கு ஏற்ப பின்னணியில் இடி முழக்கம் மற்றும் மழையின் ஒலிகளை எஃபெக்ட் ஆக தேவா பயன்படுத்திய விதம் வேற லெவல்.
உழைக்கும் வர்க்கத்தின் சிறப்பை சிவப்போடு ஒப்பிட்டு வைரமுத்து எழுதிய வரிகளுக்கு தேவா ட்ரம்பெட் ஒலிகளை பயன்படுத்தி கம்பீரமாக இசையமைத்த பாடல் தான் ரெட் படத்தின் மாஸ் டைட்டில் ஓப்பனிங் சாங்.
இந்தப் படத்தில் வரும் ‘ஒல்லிக்குச்சி உடம்புக்காரி’ துள்ளலான வெஸ்டர்ன் ஃபீட்ஸை எலக்ட்ரானிக் ஒலிகளுடன் கலந்து தியேட்டரையே அதிர வைத்தப்பாடல்.
எத்தனை கவலைகள்
எத்தனை டென்ஷன்
ஸ்ட்ரெஸ் இருந்தாலும்
தேவாவின் இசையில் மலர்ந்த
பாடலைக் கேட்டால்
எனர்ஜி லெவல் கூடும். என்பதற்கு இந்த ‘தூதுவளை அரைச்சு’பாடல் கிராமத்து நையாண்டியில் மிக எளிமையான தாளத்தில் அமைந்த பாடல்.
தேவாவின் குரலில் ஒலித்த மிக முக்கியமான பக்தி பாடல்களில் ஒன்று தேவி கருமாரி பாடல் உடுக்கை மற்றும் பம்பை ஒலிகள் நிறைந்த இசை
இப்படி எல்லா வகை உணர்வுகளையும் தன் இசையின் மூலம் கடத்திய தேவா அவர்களுக்கு தனி முத்திரையை கொடுத்தவை ‘ கானா’ பாடல்கள்.
தேவாவின் கானா
அந்த நாளின்
மொத்த கசப்புகளையும்
விரட்டி விடும் .
சலோமியா பாடல் பிடிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா? கானாவையும் மேற்கத்திய பாப் இசையும் கலந்து தேவா உருவாக்கிய ஒரு மேஜிக்
அவர் தன் காந்த குரலில் இழுத்துப் பாடும்போது தியேட்டரேஅதிர்ந்தது
‘கவலைப்படாதே சகோதரா’ தேவாவின் கரியரில் மிக முக்கியமான மைல்கல்
வாழ்க்கை தத்துவத்தை மெட்ராஸ் கானா பாணியில் (தேவாவின் குரலில் ) எதார்த்தமாக சொல்லும் இந்தப் பாடல் பக்கா மாஸ் .
காற்றிருக்கும் வரை தேவாவின் கானாவும் இருக்கும்.
கடல் அலைகள் ஓய்ந்தாலும்
தேவாவின் மெலடிகளும் ஓயாது .
எளிய மக்களின் உணர்வுகளுக்கு தன் இசையால் மகுடம் சுட்டிய மாபெரும் கலைஞனே….
தலைமுறைகள் கடந்தும் உன் இசையில் மலர்ந்த பாடல்கள் காதுகளில் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும்.
காட்சிகளில் சொல்லப்படாத உணர்ச்சிகளைக் கூட இசையின் மூலமாக உணர வைத்த உங்களை எங்களால் என்றும் மறக்க முடியாது.
காற்றில் கலந்த தேனிசையே… சென்று வாருங்கள்.
என்றென்றும் அன்புடன்
ஆதிரை வேணுகோபால்.