Cricket
oi-Yogeshwaran Moorthi
மும்பை: பஞ்சாப் மாநில உள்ளூர் கிரிக்கெட் தொடரில் ஆடிய அபிஷேக் சர்மா 91 பந்துகளில் 25 சிக்ஸ், 15 பவுண்டரிகள் உட்பட 233 ரன்களை விளாசி இருப்பது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக அபிஷேக் சர்மா ஆடிய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 533 ரன்களை குவித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்திய அணி அடுத்ததாக இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. ஆகஸ்ட் 7ஆம் தேதி இந்திய அணி வீரர்கள் பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளனர். இதனால் இந்திய டி20 அணியில் ஆடும் வீரர்கள் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வருகின்றனர். அந்த வகையில் இளம் வீரர் அபிஷேக் சர்மா பஞ்சாப் மாநில உள்ளூர் கிரிக்கெட்டில் ஆடி வருகிறார்.

அந்த வகையில் டர்ன் சரன் அணிக்கு எதிரான போட்டியில் அம்ரிஸ்டர் மென் சீனியர் அணி களமிறங்கியது. இதில் அம்ரிஸ்டர் அணிக்காக அபிஷேக் சர்மா களமிறங்கினார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா சிக்சரும், பவுண்டரியுமாய் வெளுத்து வாங்கினார். மொத்தமாக 25 சிக்ஸ், 15 பவுண்டரி உட்பட 233 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
முதல் விக்கெட்டுக்கு மட்டும் 305 ரன்கள் குவிக்கப்பட்டது. 25 ஓவர்கள் வரை அபிஷேக் சர்மா களத்தில் இருந்து அசத்தினார். அபிஷேக் சர்மாவின் இரட்டை சதம் காரணமாக அம்ரிஸ்டர் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 533 ரன்களை குவித்தது. இதனால் அபிஷேக் சர்மாவை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இங்கிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் அபிஷேக் சர்மா நல்ல ஃபார்மில் இல்லை. இதனால் இந்திய அணியில் இருந்து அபிஷேக் சர்மாவை நீக்க வேண்டும் என்ற குரல்கள் அதிகரித்தன. தற்போது அபிஷேக் சர்மா மீண்டும் நல்ல ஃபார்முக்கு வந்துள்ளார். இதனால் ஆசியப் போட்டிகளுக்கு முன்பாகவே அபிஷேக் சர்மா அசத்தலான ஃபார்முக்கு வருவார் என்று நம்பப்படுகிறது.
ஆகஸ்ட் மாதத்தில் அபிஷேக் சர்மா முழுக்க முழுக்க உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளார். செப்டம்பர் மாதத்தில் ஆசியப் போட்டிகள் தொடங்க உள்ளது. அதற்கு முன்பு வரை பஞ்சாப் அணிக்காக தான் அபிஷேக் சர்மா பேட்டிங் செய்வார் என்று பார்க்கப்படுகிறது.